
வணக்கம் நண்பர்களே 3டி printer பயன்படுத்தி நம் ஒரு பொருள் செய்யலாம் மற்றும் பரிசு பொருள்கள் செய்யலாம் அல்லது சிலை வடித்தல் போன்ற டிசைன் என்ன வைத்திருக்கிறோமோ அவற்றை செய்யலாம் என்று தான் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று வீடு கட்டலாம் அதாவது சின்ன சிறிய அளவிலான வீடு கிடையாது நம் வசிக்கும் பெரிய அளவுடைய வீடு 3d printரில் கட்டி முடித்துள்ளனர்.

எவ்வாறு கட்டப்பட்டுள்ளது இந்த 3d print வீடு என்றால் 24 மணி நேரத்திற்குள் கட்டிமுடிக்கப்பட்ட என்ற பெருமையை கொண்டுள்ளது வீடு இந்தியாவைப் பொறுத்தவரையில் 3லிருந்து 6 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட எடுத்துக் கொள்ளும் வீடு கட்டுவதற்கு .ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நாளில் வீடு கட்டப்பட்டுள்ளது அதுவும் சாதாரண வீடு ஒப்பிடும்பொழுது பணத்தை பொருத்தளவில் கம்மியாக உள்ளது இந்த சாதனையை செய்துள்ளது icon\’s நிறுவனம். இந்த நிகழ்வு மெக்சிகோ என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது

இந்த நிகழ்வு மெக்சிகோ என்னுமிடத்தில் நிகழ்ந்துள்ளது இங்குதான் முதன்முதலாக 3d தொழில்நுட்பத்தில் கட்டப்பட்ட வீடு அதாவது உலகத்தில் முதல் முறையாக கட்டப்பட்ட வீடு என்ற பெருமையை இந்த வீடு பெற்றுள்ளது.
ஒரு வீடுதான் கட்டினது என்று சொன்னேனல்லவா கிடையாது 2 வீடுகள் கட்டி உள்ளது அதுவும் 500 சதுர அடி அளவில் உள்ளது ஒரு கால் பாத்ரூம் மற்றும் சமையலறை படுக்கை அறையுடன் கூடிய ஒரு வீட்டை அமைத்துள்ளது.

இந்த3d printரை ராட்சச வண்டியை கொண்டு வந்து ink பதிலாக ஒரு வகை சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது இவ்வாறு கட்டப்படும் வீடு இது விரைவாக நடைபெற்று ஒரு வீடாக நமக்கு கிடைக்கிறது. பின்பு ஜன்னல்கள் கதவுகள் ஆகிவற்றை கட்டுமான பணியாளர்களை கொண்டு பொருத்தப்படுகிறது இதேபோன்று 48 வீடுகள் அடுத்த ஆண்டுக்குள் கட்டித்தரப்படும் என்று லாப நோக்கமற்று இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வாறான வசதிகள் இந்தியாவில் விரைவில் வந்தால் நல்லாயிருக்கும் என்று நினைக்கிறது நம் உள்ளம் .